அஜித்தின் ‘டேர் டெவில்’ எப்படி இருக்கும்? - ஆதிக் அப்டேட்

அஜித்தின் ‘டேர் டெவில்’ எப்படி இருக்கும்? - ஆதிக் அப்டேட்
Updated on
1 min read

‘டேர் டேவில்’ படம் குழந்தைகள், குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக இருக்கும் என்று அதன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவில், சிறந்த கமர்ஷியல் இயக்குநருக்கான விருது பெற்று பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் குமாருடன் தான் இரண்டாவதாக இணையும் படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசும் போது “‘குட் பேட் அக்லி’ படத்துக்கு என்ன விருதுகள் கிடைத்தாலும் அதை நான் அஜித் சாருக்கு தான் டெடிக்கேட் பண்ணுவேன். என்னுடைய படங்கள் சரியாக போகாமல் நான் மிகவும் துவண்டு இருந்த நேரத்தில்தான் அவரை சந்தித்தேன்.

முதல் நாளில் இருந்து என் மீது  நம்பிக்கை வைத்து முழுமையாக என்னை ஊக்குவித்தார். அவருடன் படப்பிடிப்பில் இருந்த அந்த 73 நாட்களும் என் வாழ்வின் சிறந்த தருணங்கள்.

‘குட் பேட் அக்லி’ மாதிரியே மீண்டும் ஒரு படம் பண்ணினால், அது அந்தப் படத்தையே திரும்ப பார்ப்பது போல் இருக்கும். அடுத்து அஜித் சாருடன் நான் பண்ணும் படம் அதற்கு நேர் எதிராக இருக்கும். நிச்சயம் குழந்தைகள், குடும்பங்கள் என எல்லோரும் கொண்டாடும் கமர்ஷியல் படமாக அது இருக்கும்’ என்று பேசினார்.

‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றி வருகிறார். ‘ஏகே64’ என அழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கிறார். படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.

அஜித்தின் ‘டேர் டெவில்’ எப்படி இருக்கும்? - ஆதிக் அப்டேட்
விஜய் சேதுபதியின் ‘ஸ்​லம்​டாக் 33 டெம்​பிள் ரோடு’ கிளிம்ப்ஸில் கெத்து காட்டும் தபு!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in