‘டாக்ஸிக்’ விழாவில் விபத்து: 4 மாணவர்கள் காயம் - படக்குழு மீது வழக்கு

‘டாக்ஸிக்’ விழாவில் விபத்து: 4 மாணவர்கள் காயம் - படக்குழு மீது வழக்கு
Updated on
1 min read

யாஷ் நடித்​துள்ள ‘டாக்​ஸிக்’ திரைப்​படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைத​ரா​பாத் அருகே மல்லா ரெட்டி பல்​கலைக்​கழக மைதானத்​தில் நேற்று முன் தினம் இரவு நடை​பெற்​றது. இதில் யாஷ் உள்பட படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர்.

இந்த விழாவை பார்க்க அப்​பகுதி மாணவர்​களும் யாஷின் ரசிகர்​களும் அங்கு பெரு​மள​வில் திரண்​டனர். இதனால் மைதானம் முழு​வதும் பெரும் கூட்​டம் காணப்​பட்​டது. விழா நடை​பெற்​றுக் கொண்​டிருந்​த​போது கூட்ட நெரிசல் காரண​மாக திடீர் பரபரப்பு ஏற்​பட்​டது. சில மாணவர்​கள் நடிகர்​, நடிகைகளைக் காண்​ப​தற்​காக மேடைக்கு அரு​கில் அமைக்​கப்​பட்​டிருந்த உயர​மான ‘ஸ்​பீக்​கர் பாக்​ஸ்’ மீது ஏறி நின்​றனர்.

யாஷ் பேசிக்​கொண்​டிருந்​த​போது, அந்த ‘ஸ்​பீக்​கர் பாக்​ஸ்​’​ திடீரென சரிந்து விழுந்​தது. இதில் அதில் ஏறி நின்ற மாணவர்​கள் கீழே விழுந்​தனர். இதில் ஒரு மாணவி உள்பட 4 பேர் பலத்த காயமடைந்​தனர். அவர்​கள் உடனடி​யாக அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டனர். இந்​தச் சம்​பவத்​தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்​பட்​டது.

விபத்தை உடனடி​யாகக் கவனித்த நடிகர் யாஷ், பேச்சை பாதி​யிலேயே நிறுத்​தி​விட்​டு, காயமடைந்​தவர்​களின் பாது​காப்பு பற்றி விசா​ரித்​தார். நிலைமை சரி​யானதும் பேச்​சைத் தொடர்ந்​தார்.

இந்​நிலை​யில் சரி​யான பாது​காப்பு ஏற்​பாடு​களைச் செய்​யாததாக பல்​கலைக்​கழக நிர்​வாகம், நிகழ்ச்சி ஏற்​பாட்​டாளர்​கள் மற்​றும் படக்​குழு​வினர் மீது பேட் பஷீ​ரா​பாத்​ போலீ​ஸார்​ வழக்​குப்​ பதிவு செய்​துள்​ளனர்​.

‘டாக்ஸிக்’ விழாவில் விபத்து: 4 மாணவர்கள் காயம் - படக்குழு மீது வழக்கு
All We Imagine As Light: இளைப்பாறுதல் தேடும் மனிதிகள் பார்வதி, பிரபா, அனு | திரை தேவதைகள் 32

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in