

ரூ.50 கோடி வசூலை கடந்திருப்பதால் ‘களம்காவல்’ படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஜித்தின் கே.ஜோஷ் இயக்கத்தில் மம்மூட்டி, விநாயகன், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘களம்காவல்’. மம்மூட்டி கம்பெனி தயாரித்த இப்படத்தினை வேஃபரார் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. டிசம்பர் 5-ம் தேதி எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியானது. அதுவே இப்படத்தின் பெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.
முதல் காட்சி முடிந்தவுடனே பலரும் படம் நன்றாக இருப்பதாக குறிப்பிடத் தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து திரையரங்குகள் அதிகரிப்பு தொடங்கியது. இதனால் படத்தின் வசூல் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது முதல் 3 நாட்களில் உலகளவில் 44.15 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
4 நாட்களில் கண்டிப்பாக 50 கோடியை கடந்திருக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சின்ன பட்ஜெட்டில் பெரிய லாபம் ஈட்டிய படமாக ‘களம்காவல்’ இருக்கும் என தெரிகிறது. மம்மூட்டியின் வில்லத்தனமான நடிப்பே இந்த வெற்றிக்கு முதல் காரணம் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.