

தமிழில், கொலை, சிங்கப்பூர் சலூன், தி கோட், லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை மீனாட்சி சவுத்ரி. இந்தியிலும் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு நடிகர் சுஷாந்தை காதலித்து வருவதாகச் வதந்தி பரவியது.
இதுகுறித்து மீனாட்சி சவுத்ரி கூறும்போது, "சுஷாந்த் என் நண்பர். எங்களுக்கிடையே இருப்பது நட்பு மட்டும்தான். காதலிப்பதாக வரும் செய்திகள் வதந்தி.
நான் தெலுங்கு சினிமாவில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாதம் ஒரு ஹீரோவுடன் என்னை இணைத்து வதந்தி பரப்பி வருகிறார்கள். தங்களுக்கு பரபரப்பான செய்தி வேண்டும் என்பதற்காக என் பெயரை அவமானப் படுத்துகிறார்கள்' என்று தெரிவித்துள்ளார் மீனாட்சி சவுத்ரி.