மோகன்லாலுடன் நடிப்பது வரம்: பாக்யஸ்ரீ போர்ஸ் மகிழ்ச்சி

மோகன்லாலுடன் நடிப்பது வரம்: பாக்யஸ்ரீ போர்ஸ் மகிழ்ச்சி
Updated on: 
1 min read

மோகன்​லால் நடித்து வரும் ‘ஆபரேஷன் கங்​கா’ திரைப்​படத்​தின் படப்​பிடிப்பு இப்​போது நடை​பெற்று வரு​கிறது. இதில் பாலிவுட் நடிகர் அர்​ஜுன் ராம்​பால், ஆதில் ஹுசைன், பாக்யஸ்ரீ போர்​ஸ், ஆர்​.​பார்த்​திபன் உள்​ளிட்ட பலர் நடிக்​கின்​றனர்.

மோகன்​லாலின் 367-வது படமான இதை, ‘மேப்​படி​யான்’ படத்தை இயக்​கிய விஷ்ணு மோகன் எழுதி இயக்​கு​கிறார். உக்​ரைன்​–ரஷ்யா போரின் பின்​னணி​யில் இந்​தியா மேற்​கொண்ட மீட்பு நடவடிக்​கைக்கு ‘ஆபரேஷன் கங்​கா’ என்று பெயர் வைத்​திருந்​தனர். இந்​தச் சம்​பவத்தை அடிப்​படை​யாகக் கொண்டு இப்​படம் தயா​ராகிறது.

இதன் படப்​பிடிப்​பில் பங்​கேற்ற பாக்ய போர்​ஸ், மோகன்​லாலுடன் நடிப்​பது ஆசீர்​வாதம் என்று தெரி​வித்​துள்​ளார். இதுபற்றி அவர், “உங்​களோடு இணைந்து நடிப்​பதை வரமாக உணர்​கிறேன். ஒவ்​வொரு நாள் படப்​பிடிப்​பின் போதும் உங்​களது கண்​களின்​ மூலம்​ சினி​மாவை காண​வும்​ உங்​களிட​மிருந்​து கற்​றுக்​கொள்​ள​வும்​ முடிகிறது. நீங்​கள்​ உண்​மை​யிலேயே வரம்​ பெற்​றவர்​” என்​று நெகிழ்​ச்​சி​யுடன்​ குறிப்​பிட்​டுள்​ளார்​.

மோகன்லாலுடன் நடிப்பது வரம்: பாக்யஸ்ரீ போர்ஸ் மகிழ்ச்சி
Belonging: நான் ‘நான்’ ஆக இருக்க இடம் இருக்கிறதா? | டீனதிகாரம் 4
மோகன்லாலுடன் நடிப்பது வரம்: பாக்யஸ்ரீ போர்ஸ் மகிழ்ச்சி
‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு நிறைவு - படக்குழு அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in