சிரஞ்சீவி படத்தில் இணையும் அனுராக் காஷ்யப்

சிரஞ்சீவி படத்தில் இணையும் அனுராக் காஷ்யப்
Updated on: 
1 min read

சிரஞ்சீவியின் புதிய படமான ‘காக்க’-வில் (Kaaka) பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் நடிக்க இருப்பதாக அப்படத்தின் இயக்குநர் பாபி கொல்லி தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவலை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நீண்ட தாக்கத்தை உருவாக்கவே படைக்கப்படுகின்றன. ‘காக்க’ படத்தின் முக்கியமான கதாபாத்திரத்துக்கு ஆற்றல்மிக்க அனுராக் காஷ்யப்பை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மிகவும் விறுவிறுப்பாக பொழுதுபோக்கு சித்திரத்துக்கு அவரின் இருப்பு நிச்சயமாக இன்னுமொரு பரிணாமத்தைக் கொடுக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

‘வால்டர் வீரய்யா’ என்ற படத்தின் வெற்றிக்கு பின்பு சிரஞ்சீவி – பாபி இருவரும் மீண்டும் ‘காக்க’ படத்தில் இணைந்துள்ளனர். கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை உருவாக்கி வருகிறது.

தற்போது ஹைதராபாத்தில் நடந்துவரும் படப்பிடிப்பில் மற்ற நடிகர்களுடன் அனுராக் காஷ்யப் பங்கேற்று வருகிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணியை மேற்கொள்ளும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படம் 2027, ஜனவரி 13 அன்று வெளியாக இருக்கிறது.

சிரஞ்சீவி படத்தில் இணையும் அனுராக் காஷ்யப்
‘ஏஐ உடனான போரில் உங்களால் வெல்ல முடியவில்லை எனில்...’ - ராம் கோபால் வர்மா கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in