இன்​னொரு ‘ஜெய் ஹோ ’ பாடல்

இன்​னொரு ‘ஜெய் ஹோ ’ பாடல்
Updated on
1 min read

ஜெயசூர்​யா, ரித்​திகா சிங் நடிக்​கும் பான் - இந்​தியா திரைப்​படம் ‘ஆபரேஷன் டிரால்’. இதில் முரளி ஷர்​மா, காவ்யா ஷெட்​டி, ஆன்சன் பால், நந்​தலால் கிருஷ்ண​மூர்த்​தி, வினய் ராய், சித்​திக், சாய் குமார் உள்​ளிட்​டோர் நடிக்​கின்​றனர்.

குட்​வில் என்​டர்​டெ​யின்​மென்ட்ஸ் சார்​பில் ஜாபி ஜார்ஜ் தாட​தில் தயாரிக்​கும் இப்​படத்தை ரதீஷ் வேகா இயக்​கு​கிறார். மலையாளம், தமிழ், தெலுங்​கு, கன்​னடம், இந்தி மொழிகளில் வெளி​யாக இருக்​கும் புல​னாய்வு த்ரில்​லர் திரைப்​பட​மான இது, காஷ்மீரின் டிரால் பகு​தி​யில் இந்​திய ஆயுதப் படைகளுக்​கும் பயங்​கர​வா​தி​களுக்​கும் இடையே நடை​பெற்ற மோதலை அடிப்படை​யாகக் கொண்டு உரு​வாகிறது.

தேசப்​பற்றை மைய​மாகக் கொண்ட இப்​படத்​தில் இருந்து சுதந்​திர தினத்தை முன்​னிட்டு ‘ஜெய் ஹோ’ என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். சுதிர் யாது​வன்ஷி பாடி​யுள்ள இப்​பாடல் ஏ.ஆர். ரஹ்​மானின் ‘ஜெய் ஹோ’ பாடலை நினை​வூட்​டி​னாலும் தேசப்​பற்று உணர்​வை​யும் நம் நாட்​டின் பெரு​மை​யை​யும் வெளிப்படுத்​தும் வித​மாக எழுதப்​பட்​டுள்​ள​தாகப் படக்​குழு தெரிவித்​துள்​ளது.

இன்​னொரு ‘ஜெய் ஹோ ’ பாடல்
மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in