பவன் கல்யாண் விவாகரத்து: பரஸ்பர புரிதலுடன் மனைவியை பிரிவ​தாக அறிவிப்பு

பவன் கல்யாண் விவாகரத்து: பரஸ்பர புரிதலுடன் மனைவியை பிரிவ​தாக அறிவிப்பு
Updated on: 
1 min read

அம​ராவதி: ஆந்​திர துணை முதல்​வர் பவன் கல்யாண் தனது 3-வது மனை​வியான ரஷ்ய நாட்​டைச் சேர்ந்த அன்னா லெஷ்னேவாவை பிரிந்தார். இவர்​களது 13 ஆண்டு திருமண பந்தம் முடிவுக்கு வந்​த​தாக இரு​வரும் கூட்​டாக அறி​வித்​துள்​ளனர்.

நடிகர் சிரஞ்​சீ​வி​யின் சகோ​தரரும் நடிகரு​மான பவன் கல்​யாண் கடந்த 1997-ல் நந்​தினி என்​பவரை திரு​மணம் செய்தார். 2008-ல் இரு​வரும் பிரிந்​தனர். அடுத்்து தன்​னுடன் தெலுங்கு திரைப்​படத்தில் நடித்த நடிகை ரேணு தேசாயை, 2009-ல் திரு​மணம் செய்தார். இரு​வரும் 2012-ல் விவாகரத்து பெற்​றனர். 2013-ல் ரஷ்ய நாட்​டைச் சேர்ந்த அன்னா லெஷ்னே​வாவை பவன் கல்​யாண் திரு​மணம் செய்தார். கடந்த 2024-ல் பவன் கல்​யாண் ஆந்​திர துணை முல்வரா​னார்.

இந்​நிலை​யில், இவர்​களின் 13 ஆண்டு கால திருமண பந்​தம் முடிவுக்கு வந்​துள்​ளது. இவர்​கள் இரு​வரும் மனமொத்து பிரிவ​தாக அறி​வித்​துள்​ளனர். இரு​வரும் கூட்​டாக வெளி​யிட்​டுள்ள அறிவிப்பில்,‘‘எங்​கள் வாழ்க்​கை​யின் ஒரு முக்​கிய பகு​தியை ஒன்றாகக் கழித்த பிறகு, பரஸ்பர புரிதலுட​னும் மரியாதையுடனும் பிரிந்து செல்ல நாங்​கள் முடிவு செய்துள்ளோம்.

நாங்​கள் தொடர்ந்து நல்ல நண்​பர்​களாக​வும், எங்கள் பிள்​ளை​களுக்​குப் பொறுப்​பான பெற்​றோர்​களாக​வும் இருப்​போம்,’’ என்று கூறியுள்ளனர். இந்த தம்​ப​தி​யினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பவன் கல்யாண் விவாகரத்து: பரஸ்பர புரிதலுடன் மனைவியை பிரிவ​தாக அறிவிப்பு
சட்டம் - ஒழுங்கு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை: தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் இன்று ஆலோசனை

X