

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படம் தாமதமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ராக்கா’. இதன் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. இன்னும் 4 மாதங்கள் வரை படப்பிடிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தாமதத்தினால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படம் தொடங்க தாமதமாகும் என்பது உறுதியாகிறது.
அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படம் என்பதால், இதன் கிராபிக்ஸ் காட்சிகள் முடித்து வெளியிட தாமதமாகும். அதற்கு முன்பாக லோகேஷ் கனகராஜ் படத்தினை முடித்துவிடலாம் என்று திட்டமிட்டார் அல்லு அர்ஜுன். ஆனால், ‘ராக்கா’ படப்பிடிப்பு முடிவடையாத காரணத்தினால் முன்பு திட்டமிட்டப்படி லோகேஷ் கனகராஜ் படம் தொடங்கப்படாது என்பது மட்டும் உறுதி.
‘ராக்கா’ படத்தில் தீபிகா படுகோன், ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு உள்ளிட்ட பலர் அல்லு அர்ஜுன் உடன் நடித்து வருகிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.