சுரேகா வாணி எச்​சரிக்கை

நடிகை ​சுரேகா வாணி

நடிகை ​சுரேகா வாணி

Updated on: 
1 min read

தமி​ழில் காதலில் சொதப்​புவது எப்​படி, ஜில்லா, எதிர்​நீச்​சல், மெர்சல் உள்​பட பல படங்​களில் குணசித்​திர வேடங்​களில் நடித்திருப்பவர், தெலுங்கு நடிகை ​சுரேகா வாணி.

இவருடைய சில வீடியோக்​களும் புகைப்​படங்​களும் சமூக வலைதளங்​களில் வைரலாகி வரு​கின்​றன. அந்த வீடியோக்​களில், சுரேகா தன்னை விட இளவயதுடைய இளைஞருடன் இருக்​கும் காட்​சிகள் இடம்​பெற்​றுள்​ளன. அத​னால் அவர் இரண்​டாவது திருமணம் செய்து​கொள்ள இருப்​ப​தாக செய்​தி​கள் வெளியாயின. இந்​நிலை​யில் இந்த விவகாரம் குறித்து சுரேகா வாணி எச்சரிக்கை விடுத்​துள்​ளார்.

அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “எனது இன்ஸ்டா கணக்கு ஹேக் செய்​யப்​பட்​டுவிட்டது. எனது அனுமதி​யின்றி எனது தனிப்​பட்ட மற்றும் அந்​தரங்​கத் தகவல்​கள் கசிந்​துள்​ளன. மீம் பக்​கங்​கள், ஊடகங்​கள், பத்​தி​ரி​கைகள் மற்​றும் யூடியூப் சேனல்​கள் அந்த வீடியோக்​களைப் பகிரவோ அல்​லது வெளி​யிடவோ வேண்​டாம். மீறினால் கடுமையான சட்ட நட​வடிக்கை எடுக்​கப்​படும். வியூஸ்க்காக ஒரு​வரின் தனிப்​பட்ட வாழ்க்கையைச் சூறை​யாட வேண்​டாம்” என்று எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

<div class="paragraphs"><p>நடிகை ​சுரேகா வாணி</p></div>
சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி ஹரி பாக்ஸர் அமெரிக்காவில் கைது

X