

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ஓம்’. இதில் மம்மூட்டி, நஸ்ருதீன் ஷா, இந்திரன்ஸ், சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்பட பலர் நடித்துள்ளனர். நாளை வெளியாகும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இதில் நடிகை ஸ்ரீலீலா பேசும்போது, “எனது திரைப்பயணம் பற்றி அனைவருக்கும் தெரியும். இளம் வயதிலேயே திரையுலகுக்கு வந்துவிட்டேன். அப்போது எந்தப் படத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்யும் நிலையில் நான் இல்லை. வந்த வாய்ப்புகளில் நடித்துக்கொண்டிருந்தேன். நிதானமாகச் சிந்தித்தபோதுதான், எங்கே தவறு செய்தேன் என்பது புரிந்தது.
‘ஓம்’ வாய்ப்புக்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நன்றி. இந்தப் படத்தில் பாடல்கள் இருக்காது என்றுதான் அவர் முதலில் கூறினார். அது எனக்குப் புதுமையாகத் தோன்றியது. இந்தப் படத்தில் நான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். எனது புதிய பரிமாணத்தை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.
தனுஷ் உடன் நடிக்கும்போது, முற்றிலும் புதிய உலகுக்கு அழைத்துச் செல்கிறார். அவர் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதும் அவருடன் பணியாற்றுவதும் எனக்குக் கிடைத்த பேறு. ஒரு நடிகராகவும் மனிதராகவும் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்” என்றார்.