‘மா இண்டி பங்காரம்’ படத்தில் ஒரு பெண்ணின் கதை - சமந்தா தகவல்

‘மா இண்டி பங்காரம்’ படத்தில் ஒரு பெண்ணின் கதை - சமந்தா தகவல்
Updated on
1 min read

நடிகை சமந்தா, தனது ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் தயாரித்து நடித்துள்ள படம், ‘மா இண்டி பங்காரம்’. இதை நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார்.

‘ஓ! பேபி’ படத்துக்குப் பிறகு இருவரும் இதில் இணைந்துள்ளனர். குல்ஷன் தேவய்யா, திகாந்த், கவுதமி, மஞ்சுஷா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் ஆக் ஷன் காட்சியிலும் சமந்தா நடித்துள்ளார்.

இப்படம் பற்றி சமந்தா கூறும்போது, “இது ஒரு பெண்ணின் கதையைச் சொல்லும் படம். அவளுடைய பலம், அவளுடைய தைரியத்திலிருந்து மட்டுமல்லாமல், அவளுடைய பலவீனத்தில் இருந்தும் வருகிறது. இந்த கேரக்டரில் நடித்ததும் ஒரு தயாரிப்பாளராக இப் படத்தை உருவாக்கியதும் எனக்கு நம்ப முடியாத ஆனால் திருப்தியான பயணமாக அமைந்தது.

இந்தப் படத்தின் உலகம், யதார்த்தமானதும் உணர்வுப்பூர்வமானதுமாக இருக்கும். இதன் கதை குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தைப் பார்க்கும்போது, ரசிகர்கள் கதையோடு இணைவார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

‘மா இண்டி பங்காரம்’ படத்தில் ஒரு பெண்ணின் கதை - சமந்தா தகவல்
இந்தியப் பொருட்களுக்கு 500% வரி: அமெரிக்க அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் ஜன.22-ல் போராட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in