

நடிகை கயாடு லோஹர்
தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ மூலம் அறிமுகமான நடிகை கயாடு லோஹர், அடுத்து இதயம் முரளி, மஞ்சணத்தி, இம்மோர்டல் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் சமூக ஊடகங்களில் இருந்து சில காலம் விலகி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவில், “சமூக ஊடகங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போகிறேன். சில நேரங்களில், நம் உடலுக்குக் கொடுக்கும் அதே வகையான ஓய்வு மனதுக்கும் தேவைப்படுகிறது. அதனால் சில காலம் திரைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையுடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறேன்.
எனக்கு ஆதரவளித்த, ஊக்குவித்த, அன்பைப் பரப்பிய அனைவருக்கும் நன்றி. உங்கள் செய்திகளும் அன்பும் எனக்கு மிகவும் முக்கியமானவை. நான் சிறிது காலம் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருப்பேன், ஆனால் முக்கிய அறிவிப்புகள் இருந்தால், எனது குழுவினர் இந்தக் கணக்கில் பகிர்ந்து கொள்வார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.