“திருமணம் அவ்​வளவு முக்கியமல்ல” - நடிகை திவ்யா கருத்து

“திருமணம் அவ்​வளவு முக்கியமல்ல” - நடிகை திவ்யா கருத்து
Updated on
1 min read

தமிழில், பொல்​லாதவன், வாரணம் ஆயிரம் உள்பட பல படங்களில் நடித்​திருப்​பவர் கன்னட நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா. இவர் ‘திருமணம் அவ்​வளவு முக்​கியமில்​லை’ என்று கூறி​யிருப்​பது சமூக ஊடகங்​களில் விவாதத்தை ஏற்​படுத்தி இருக்​கிறது.

இதுகுறித்து அவர் அளித்த பேட்​டி​யில், “திரு​மணம் செய்து கொள்​வது உண்​மை​யிலேயே அவ்​வளவு முக்​கி​யம் இல்​லை. திரு​மணம் என்​பது நான் யார் என்​பதை வரையறுக்​காது. திரு​மணம் செய்​து​கொள்​ளாமல் இருந்தாலும் மகிழ்ச்​சி​யாக இருக்​கிறோம். மகிழ்ச்​சி​யாக இருப்​பது​தான் மிக​வும் முக்​கி​யம். அதே நேரம் திரு​மணம் அனை​வருக்​கும் பொருந்​தாது என்று கூற​வில்​லை. மனிதர்​களாகிய நாம் எப்​போதும் மாற்​றங்​களை விரும்​பு​கிறோம்.

ஒரு​வேளை பிரச்​சினை அங்​கிருந்​து​தான் தொடங்குகிறது. நல்ல நண்​பர்​களாக​வும், ஒரே மாதிரி​யான மதிப்​பு​களைக் கொண்​ட​வர்​களாக​வும் இருந்​தால், திரு​மணம் செய்​து​கொள்​வது நல்ல யோசனை​யாகத் தோன்​றும். திரு​மணம் செய்​து​கொண்டு மகிழ்ச்​சி​யாக வாழ்​பவர்​களும் நான் சொல்​வதை ஏற்​றுக்​கொள்​வார்​கள் என்று நினைக்கிறேன்.

திரு​மணம் செய்​து​கொள்ள விரும்​பும் சரி​யான நபரைச் சந்​தித்து விட்​டீர்​களா? என்​று கேட்​கிறார்​கள். அப்​படிப்​பட்​ட ஒரு​வரைச்​ சந்​திக்​கவில்​லை. அதில்​ இப்​போது கவனம்​ செலுத்​தவும்​ இல்​லை” என்று தெரிவித்​துள்​ளார்​.

“திருமணம் அவ்​வளவு முக்கியமல்ல” - நடிகை திவ்யா கருத்து
Pallaburusu: புறாவுக்காக ஒரு பெரும் போர் | ஓடிடி திரை அலசல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in