

தமிழில், 'கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை', ‘கச்சேரி ஆரம்பம்', 'ஆறாவது வனம்' உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை அன்சிபா. இவர், மலையாள நடிகர் சங்கமான 'அம்மா' அமைப்பின் இணைச் செயலாளர் பதவியில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமாவுக்கு மலையாள நடிகர் டினிடாம் கொடுத்த மனஉளைச்சலே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
தன்னை அவர் ஜிகாதி என்று குறிப்பிட்டதாகவும், கட்டாய மதமாற்றத்தில், தான் ஈடுபடுவதாகத் தவறான வதந்திகளைப் பரப்பியதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து அவர் போலீஸில் புகார் செய்தார். விசாரித்த போலீஸார், போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து அன்சிபா எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். பரிசீலித்த நீதிமன்றம், போலீஸாரின் முடிவை நிராகரித்து, டினிடாம் மீது வழக்குப் பதிவு செய்து குற்றவியல் விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டுள்ளது.