‘டி​ராகன்’ படத்​தில் இணை​கிறார் ஆலியா பட்

நடிகை ஆலியா பட்

நடிகை ஆலியா பட்

Updated on
1 min read

‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப்​-2’, ‘சலார்’ படங்​களை இயக்​கிய பிர​சாந்த் நீல், அடுத்து இயக்கி வரும் திரைப்​படம், ‘டி​ராகன்’. இதில் ஜூனியர் என்​டிஆர் கதா​நாயக​னாக நடித்து வரு​கிறார்.

அவர் ஜோடி​யாக ருக்​மணி வசந்த் நடிக்​கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்​கும் இந்​தப் படம் தெலுங்​கு, தமிழ், இந்தி உள்பட 5 மொழிகளில் வெளி​யாக இருக்​கிறது. இந்​நிலை​யில் இந்தப் படத்தில் இந்தி நடிகர் அனில் கபூர் இணைந்​திருந்​தார். அவர் முக்கிய வேடத்​தில் நடிப்​ப​தாகக் கூறப்​பட்டது.

இதற்கிடையே பிரபல பாலிவுட்​ நடிகர்​களான ஷாகித்​ கபூர்​, ஆலியாபட்​ ஆகியோ​ரும்​ இதில் நடிக்​க இருப்​பதாகக்​ கூறப்படுகிறது. ஆர்​ஆர்​ஆர்​ படத்​தில்​ ஜுனியர் என்​டிஆருடன்​ ஆலி​யா பட்​ ஏற்​கெனவே நடித்​திருந்​தார்​.

<div class="paragraphs"><p>நடிகை&nbsp;ஆலியா பட்</p></div>
ஸ்ருதி ஹாசனின் டீப்ஃபேக் வீடியோ, புகைப்படங்​களை நீக்க நீதி​மன்​றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in