வரலாற்று பின்​னணி சாகசக் கதையில் ராம் சரண்

வரலாற்று பின்​னணி சாகசக் கதையில் ராம் சரண்
Updated on
1 min read

நடிகர் ராம் சரண் இப்​போது ‘பெத்​தி’ படத்​தில் நடித்து முடித்துள்ளார். பான் இந்​தியா வெளி​யீ​டாக உரு​வாகி​யுள்ள இதில் ஜான்வி கபூர் நாயகி​யாக நடித்​துள்​ளார். புச்சி பாபு சனா இயக்கியுள்ள இப்​படத்​துக்கு ஏ.ஆர்​.ரஹ்​மான் இசை அமைத்துள்ளார். இதையடுத்து அவர் பிரபல பாலிவுட் இயக்குநரும் தயாரிப்​பாள​ரு​மான சஞ்​சய் லீலா பன்​சாலி தயாரிக்கும் படத்​தில் நடிக்க இருக்​கிறார்.

திரை எழுத்​தாளர் கே.​வி.​விஜயேந்​திர பிர​சாத், இதன் கதையை எழு​தி​யிருந்​தார். அந்​தக் கதையை அடிப்​படை​யாகக் கொண்டு துர்​கேஷ் சிங் புதிய திரைக் கதையை வடிவ​மைத்​துள்​ளார். இக்​கதை வரலாற்று காலத்தை பின்​னணி​யாகக் கொண்ட, வன சாகசத்தை அடிப்​படை​யாகக் கொண்​டது.

இதன் திரைக்​கதை ராம் சரணின் நடிப்பு மற்​றும் தனித்​து​வத்தை வைத்து உரு​வாக்​கப்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. இப்​படத்தை முன்​னணி பாலிவுட் இயக்​குநர் ஒரு​வர் இயக்​கு​வார் என்​கிறார்​கள். இந்​தி​யில் தயாரிக்​கப்​படும் இப்​படம், தெலுங்​கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் டப் செய்​யப்பட இருக்​கிறது.

வரலாற்று பின்​னணி சாகசக் கதையில் ராம் சரண்
Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in