2 பார்ட் ஆ​கிறது ‘வாரணாசி’

2 பார்ட் ஆ​கிறது ‘வாரணாசி’
Updated on
1 min read

ராஜமவுலி இயக்​கத்​தில் மகேஷ்​பாபு, பிரி​யங்கா சோப்​ரா, பிருத்​வி​ராஜ் நடிக்​கும் திரைப்​படம், ‘வாரணாசி’. ஆக் ஷன் அட்​வெஞ்​சர் ஃபேன்​டஸி படமான இதன் கதையை ராஜமவுலி​யின் தந்​தை, விஜயேந்​திர பிர​சாத் எழு​தி​யுள்​ளார்.

இப்​படம், 2027ம் ஆண்டு ஏப்​.7-ல் வெளி​யாகிறது. இதன் முக்கியமான காட்​சிகள் கென்ய காடு​களில் படமாக்கப்பட்டுள்ளன. அதிக பட்​ஜெட்​டில் உரு​வாகும் இந்​திய சினிமா என்று இதைச் சொல்​கிறார்​கள். ராஜமவுலி​யின் ‘பாகுபலி 2’ வெளி​ நாடு​களி​லும் வரவேற்​பைப் பெற்​றது. அவர் இயக்​கிய ‘ஆர்​ஆர்​ஆர் ‘படத்​தின் பாடலுக்கு ஆஸ்​கர் விருது கிடைத்​ததை அடுத்து ‘வாரணாசி’ படத்துக்​குச் சர்​வ​தேச அளவில் எதிர்​பார்ப்பு உள்​ளது.

இந்​தப் படத்​துக்​காகப் போடப்​பட்ட வாரணாசி கோயில் மற்​றும் அந்​நகரத்​தின் பிரம்​மாண்ட செட் சமூக வலை​தளங்​களில் சமீபத்தில் வெளி​யாகி ஆச்​சரியப்படுத்​தி​யது. இந்​நிலை​யில், பிரம்மாண்டம் காரண​மாக, இப்​படத்​தின் கதையைச் சொல்ல 3 மணி நேரம் போதாது என்​ப​தால் 2 பாகங்​களாகப் படத்தை வெளியிட ஆலோ​சித்து வரு​கின்​றனர்.

“துரந்​தர் படத்தை 2 பாக​மாக வெளி​யிட்​டதை போல ராஜமவுலியும் ‘வாரணாசி’ படத்தை 2-ஆகப் பிரிக்​கத் திட்டமிட்டுள்​ளார். வசூலுக்​காகக் கதையைச் சிதைக்​காமல், முழுமை​யான விரி​வாக கதையைச் சொல்​வதற்​காக அப்​படி முடிவு செய்​துள்​ளார். இப்​படத்​தின் கதையை 3 மணி நேரத்​துக்​கு மேல் சொல்ல வேண்டும் என்​ப​தால் பரிசீலித்து வரு​கின்​றனர்” என படக்​குழு தரப்​பில் தெரிவிக்​கப் பட்​டுள்​ளது.

2 பார்ட் ஆ​கிறது ‘வாரணாசி’
Bad Girl: நாம் ‘ரம்யா’க்கள் மீது கல் வீசியே ஆக வேண்டுமா? | திரை தேவதைகள் 11

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in