காதல் கதையில் துல்​கர் சல்மான், பூஜா

காதல் கதையில் துல்​கர் சல்மான், பூஜா
Updated on
1 min read

துல்​கர் சல்​மான் நடிக்​கும் 41-வது திரைப்​படத்​துக்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என்று பெயரிடப்​பட்​டுள்​ளது. இதில் அவர் ஜோடி​யாக பூஜா ஹெக்டே நடிக்​கிறார். அவர்​களின் முதல் தோற்ற போஸ்​டரை படக்​குழு வெளி​யிட்​டுள்​ளது.

அதில் ‘காதல் மீண்​டும் மலரும்’ என்ற டேக் லைன் இடம்​பெற்றுள்ளது. ரவி நெல​குட்டி இயக்​கும் இப்​படத்தை எஸ்​எல்வி சினி​மாஸ் சார்​பில் சுதாகர் செரு​கூரி தயாரிக்​கிறார். அனய் ஓம்கோஸ்​வாமி ஒளிப்​ப​திவு செய்​கிறார். ஜி.​வி.பிர​காஷ் இசையமைக்​கிறார்.

தெலுங்​கில் உரு​வாகும் இப்​படம், தமிழ், மலை​யாளம், கன்​னடம், இந்​தி​யில் வெளி​யாக இருக்​கிறது. இது காதலை​யும் நம்பிக்கையை​யும் மீண்​டும் கண்​டு​பிடிக்​கும் ஓர் அழகான கதையைக் கொண்ட படம் என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

காதல் கதையில் துல்​கர் சல்மான், பூஜா
தீ​விர​வா​தி​களைப் புகழ்ந்து புத்தகம் அச்சிட்டதால் ஜம்மு காஷ்மீரில் 3 பதிப்​பாளர்​கள் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in