

பாலையா
பாலையா நடிக்கவுள்ள அடுத்த படத்தில் கதையையே மாற்றியமைத்து பணிபுரிந்து வருகிறது படக்குழு.
‘அகண்டா 2’ படத்துக்குப் பிறகு கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் பாலையா. இதன் படப்பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டன. இது பாலையா நடிப்பில் உருவாகும் 111-வது படமாகும். தற்போது இதில்தான் முக்கிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகும் என தெரிகிறது.
என்னவென்றால் கோபிசந்த் மாலினேனி முழுக்க வரலாற்றுப் பின்னணியில் கதையொன்றை தயார் செய்து வைத்திருந்தார். அந்தக் கதைக்காக படப்பிடிப்பு இடங்கள் தேர்வு உள்ளிட்டவை அனைத்தையும் முடித்துவிட்டார். நடிகர்கள் சம்பளம், படப்பிடிப்பு செலவு என அனைத்தையும் கணக்கிட்டால் ஒட்டுமொத்த படத்தின் செலவு எங்கேயோ போய் நின்றிருக்கிறது. இதனால் அப்படத்தின் கதையினை விட்டுவிட்டு வேறொரு கதையில் பணிபுரிய இருக்கிறார்கள்.
இதற்காக புதிய கதையொன்றை எழுதி வருகிறார் கோபிசந்த் மாலினேனி. இந்த கதைக்கு பாலையா ஒகே சொல்லிவிட்டாலும், திரைக்கதை எழுதும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதனை முடித்து மீண்டும் படப்பிடிப்பு இடங்களை எல்லாம் தேர்வு செய்து, படப்பிடிப்பு தொடங்கவுள்ளது படக்குழு.