காக்​கி நா​டா​வில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் பாலகிருஷ்ணா காயம்

நடிகர் பால​கிருஷ்ணா

நடிகர் பால​கிருஷ்ணா

Updated on
1 min read

தெலுங்கு திரை​யுல​கின் மூத்த நடிகரும், எம்​எல்​ஏவு​மான பாலகிருஷ்ணா, இன்​னும் பெயரிடப்​ப​டாத திரைப்​படம் ஒன்​றில் நடித்து வரு​கிறார்.

கோபி சந்த் மலினேனி இயக்​கும் இப்​படத்​தின் படப்​பிடிப்பு தற்போது ஆந்​திர மாநிலம், காக்​கி ​நா​டா​வில் நடை​பெற்று வருகிறது. இதில், நடிகர் மோகன் ​பாபு​வின் இளைய மகன் மன்ச்சு மனோஜுவுடன் ஆக் ஷன் காட்சி படமாக்​கப்​பட்ட போது, பால கிருஷ்ணா​வின் முழங்​கால் அருகே பலத்த காயம் ஏற்​பட்​டது. உடனடி​யாக அவரை காக்​கி​நா​டா​வில் உள்ள தனி​யார் மருத்துவமனை​யில் சேர்த்​தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. மேலும் மருத்துவர்கள் அறி​வுரைப்​படி விரை​வில் அறு​வைச் சிகிச்சை செய்​யப்பட இருக்​கிறது. “ரசிகர்​கள் கவலைப்​படத் தேவையில்லை. அவர் விரை​வில் குணமடைந்து மீண்​டும் படப்பிடிப்​புக்​குத் திரும்ப வாழ்த்​துகிறோம்” என்று படத்​தின் இயக்குநர் கோபிசந்த் மலினேனி தெரி​வித்​துள்​ளார்.

ஏராள​மான ரசிகர்​களும் அவர் விரை​வில் குணமடைய வாழ்த்துகளை தெரி​வித்​துள்​ளனர்​. ‘வீர நரசிம்​மா’ படத்​துக்கு பின்னர், கோபிசந்த் மலினேனி இயக்​கத்​தில் நடித்து வரு​கிறார் பால​கிருஷ்ணா. இது அவரின் 111-வது படம். இதில் காஜல் ஜோடியாக நடிக்​கிறார்.

<div class="paragraphs"><p><em>நடிகர் பால​கிருஷ்ணா</em></p></div>
சிக்கிமில் மீத்தேன் வாயு கசிவால் சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in