மும்பையில் அல்லு அர்ஜுன் வசிக்கும் பங்களாவுக்கு ரூ.16 லட்சம் வாடகை

மும்பையில் அல்லு அர்ஜுன் வசிக்கும் பங்களாவுக்கு ரூ.16 லட்சம் வாடகை
Updated on
1 min read

‘புஷ்பா’ படம் மூலம் பான் இந்தியா நடிகராகிவிட்ட அல்லு அர்ஜுன், அடுத்து அட்லி இயக்கும் ‘ராக்கா’ என்ற சயின்ஸ் பிக் ஷன் பேன்டசி படத்தில் நடித்து வருகிறார். இதில் தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா உள்பட சில நடிகைகள் நடிக்க உள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பும் மும்பையில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மும்பையில் ஜுஹு தாரா சாலையில் கடற்கரையைப் பார்த்தவாறு அமைந்துள்ள பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். 6 ஆயிரம் சதுர அடியிலான, 5 படுக்கையறைகளை கொண்ட இந்தப் பங்களாவின் மாத வாடகை மட்டும் ரூ.16 லட்சம் என்று கூறப்படுகிறது. 3 ஆண்டு குத்தகை அடிப்படையில் இது பெறப்பட்டுள்ளது.

மும்பையில் அல்லு அர்ஜுன் வசிக்கும் பங்களாவுக்கு ரூ.16 லட்சம் வாடகை
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in