மலை​யாளத்​தில் ரீமேக் ஆகிறது ‘ஆதார்’

மலை​யாளத்​தில் ரீமேக் ஆகிறது ‘ஆதார்’
Updated on
1 min read

கருணாஸ், அருண்​ பாண்​டியன், ரித்வி​கா, உமா ரியாஸ், பிர​பாகர் உள்பட பலர் நடித்து 2022ல் வெளி​யான திரைப்​படம் ‘ஆதார்’. இதை ராம்​நாத் பழனிகு​மார், இயக்கி இருந்​தார். இவர் கருணாஸ் நடித்த ‘திண்​டுக்​கல் சார​தி’ படத்​துக்கு திரைக்​கதை, வசனம் எழுதி​ய​வர், ‘அம்​பாச​முத்​திரம் அம்​பானி’, ‘திரு​நாள்’ உள்​ளிட்ட படங்களை இயக்​கிய​வர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்​திருந்த ‘ஆதார்’ படத்​துக்கு மகேஷ் முத்​துசு​வாமி ஒளிப்​ப​திவு செய்திருந்தார்.

விமர்சன ரீதி​யாக வரவேற்​பைப் பெற்​றிருந்த இப்​படம் இப்​போது மலை​யாளத்​தில் ரீமேக் ஆகிறது. ”ஆதார் படத்தை மலையாளத்தில் இயக்​கு​கிறேன். யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்​கிறார். தரமான படைப்​பு​களைக் கொண்​டாடும் மலை​யாள ரசிகர்​கள் ‘ஆதார்’ படத்​தை​யும் வரவேற்​பார்​கள்” என நம்பிக்கை தெரிவித்தார் ராம்​நாத் பழனிகு​மார்.

மலை​யாளத்​தில் ரீமேக் ஆகிறது ‘ஆதார்’
8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி | திரை தேவதைகள் 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in