

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வெற்றி பெற்ற படம், ‘கேஜிஎஃப்’. இதன் 2-ம் பாகமும் வெற்றி பெற்றது. இதில் இந்தி நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்திருந்தார். இதன் 3-ம் பாகம் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் நடிக்கும் ‘சலார்’ படத்தை பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். இதை முடித்துவிட்டு, ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தை இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ், என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு 2024 மார்ச் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படங்களை அடுத்து ‘கேஜிஎஃப் 3’ தொடங்கும் என்று கூறப்படுகிறது.