அதிவேக ரூ.100 கோடி வசூல்: மோகன்லாலின் ‘லூசிஃபர்’ சாதனையை முறியடித்த டோவினோ தாமஸின் ‘2018’

அதிவேக ரூ.100 கோடி வசூல்: மோகன்லாலின் ‘லூசிஃபர்’ சாதனையை முறியடித்த டோவினோ தாமஸின் ‘2018’

Published on

மலையாளத்தில் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலை குவித்த படம் என்ற பெருமையை மோகன்லாலின் ‘லூசிஃபர்’ படம் பெற்றிருந்தது. தற்போது டோவினோ தாமஸின் ‘2018’ அந்த சாதனையை முறியடித்துள்ளது.

ஜூட் அந்தனி ஜோசப் ஆண்டனி இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் ‘2018’ பாக்ஸ் ஆபீஸிலும் ‘மாஸ்’ காட்டி வருகிறது. இன்றும் கேரளாவில் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி 11 நாட்கள் ஆன நிலையில் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது. இதன்மூலம் மலையாள சினிமாவில் அதிவேகமாக ரூ.100 கோடி வசூலை குவித்த படம் என்ற பெருமையை ‘2018’ பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ திரைப்படம் 12 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in