தீபிகா படுகோன் அறிவிக்க ஆஸ்கர் மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடல் நடனம்

தீபிகா படுகோன் அறிவிக்க ஆஸ்கர் மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடல் நடனம்
Updated on
1 min read

ஆஸ்கர் விருது விழாவில் ‘ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் பாடப்பட்டது.

அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றுவருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 95வது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார்.

விழாவின் தொடக்க உரையில் ‘ஆர்.ஆர்.ஆர்' படத்தை பாலிவுட் திரைப்படம் என குறிப்பிட்ட, விழாவின் தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல்.

ஆஸ்கர் விருது விழாவில் ‘ஆர்.ஆர்.ஆர்' படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறப்பு பாடலாக இடம்பெற்றது. ஆஸ்கர் விருது மேடையில் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு அமெரிக்க நடனக் கலைஞரான நடிகை லாரன் காட்லீப் (Lauren Gottlie) உற்சாகமாக நடனமாடினார். நடனத்தின்போது அரங்கமும் உற்சாகமடைந்தது. அரங்கத்தில் இருந்தவர்கள் ஆரவாரம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆஸ்கர் விருது விழாவில், ‘நாட்டு நாட்டு’ பாடல் நேரடியாகப் பாடப்பட்டது. இந்தப் பாடலை பாடிய ராகுல் சிப்லிகுஞ்-சும் காலபைரவாவும் ஆஸ்கர் மேடையில் பாடினர். முன்னதாக, நடிகை தீபிகா படுகோன் ‘நாட்டு நாட்டு’ பாடல் குறித்த அறிமுகத்தை ஆஸ்கர் மேடையில் எடுத்துரைத்தார். பாடல் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in