இயக்குநர் பிரியதர்ஷனின் ‘கரோனா பேப்பர்ஸ்’ படத்தின் முதல் பார்வை வெளியீடு

இயக்குநர் பிரியதர்ஷனின் ‘கரோனா பேப்பர்ஸ்’ படத்தின் முதல் பார்வை வெளியீடு
Updated on
1 min read

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ள ‘கரோனா பேப்பர்ஸ்’ படத்தின் முதல் பார்வை தற்போது படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 90க்கும் அதிகமான படங்களை இயக்கியவர் இயக்குநர் பிரியதர்ஷன். அவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாக உள்ள படம் ‘கரோனா பேப்பர்ஸ்’. மலையாள நடிகர் ஷான் நிகாம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.

காயத்ரி ஷங்கர், சித்திக், ஷைன் டாம் சாக்கோ, சந்தியா ஷெட்டி, பிபி குன்ஹிகிருஷ்ணன், ஸ்ரீதன்யா, விஜிலேஷ், மேனகா சுரேஷ், பிஜு பாப்பன் மற்றும் ஸ்ரீகாந்த் முரளி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in