அரசியல் அழைப்புகள் வருகின்றன - சுதீப்

அரசியல் அழைப்புகள் வருகின்றன - சுதீப்
Updated on
1 min read

பிரபல கன்னட நடிகர் சுதீப் தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. நடிகர் சுதீப்பும் அரசியலில் களமிறங்கப் போவதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதுபற்றி சுதீப் கூறும்போது, “அனைத்து அரசியல் தலைவர்களுடனும் எனக்கு தொடர்பு இருக்கிறது. அவர்கள் என்னிடம் பேசியது உண்மைதான். ஆனால் அரசியலுக்கு வருவது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. அதற்கு முன் என் ரசிகர்கள் அதை விரும்புகிறார்களா? என்று தெரிந்துகொள்ள வேண்டும். அரசியல் இல்லாமல் சேவை செய்ய முடியும் என்கிற போது, நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in