Published : 13 Jan 2023 01:21 PM
Last Updated : 13 Jan 2023 01:21 PM

முதல் நாள் வசூலில் மாஸ் காட்டும் பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’

பாலகிருஷ்ணா

பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘வீர சிம்ஹா ரெட்டி’ திரைப்படம் முதல் நாள் ரூ.32 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் ‘வீர சிம்ஹா ரெட்டி’. பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று (ஜனவரி13) வெளியான இப்படத்தில், ஷ்ருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார், ஹனிரோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமன் இசையமைத்திருந்த இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. முழுக்க முழுக்க மாஸ் ஆக்ஷனை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் பாலகிருஷ்ணா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் முதல் நாளான நேற்று உலகம் முழுக்க படம் 32 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாலகிருஷ்ணா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜனவரி 11-ம் தேதி வெளியான விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ படங்கள் முதல் நாள் ரூ.25 கோடிக்குள் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x