‘ஹனு-மேன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘ஹனு-மேன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நாயகனாக நடிக்கும் படம் ‘ஹனு- மேன்'. வினய் ராய், வரலட்சுமி, அமிர்தா ஐயர், வெண்ணிலா கிஷோர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். கௌர ஹரி, அனுதீப் தேவ், கிருஷ்ணா சவுரப் இசையமைக்கின்றனர்.

சூப்பர் ஹீரோ பாணியில் உருவாகும் இந்தப் படத்தை பிரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்துள்ளார். அனுமனின் சக்திகளை பெற்று நாயகன் எப்படி போராடுகிறான் என்பது கதை.

மே 12ம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் மட்டுமின்றி ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், ஜப்பானிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in