2022-ன் டாப் 10 இந்திய திரைப் பிரபலங்கள்: ஐஎம்டிபி பட்டியலில் தனுஷ் முதலிடம்

தனுஷ், ஆலியா பட்  | கோப்புப் படம்
தனுஷ், ஆலியா பட் | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: 2022-ஆம் ஆண்டின் மிகப் பிரபலமான இந்திய பிரபலங்களின் பட்டியலை ஐ.எம்.டி.பி (IMDB) தளம் வெளியிட்டுள்ளது. இதில், நடிகர் தனுஷ் முதலிடம் பெற்றுள்ளார்.

2022-ஆம் ஆண்டு விடைபெறப் போகிறது. இதையொட்டி, இந்த ஆண்டில் இந்தியாவின் மிகவும் பிரபல டாப் 10 திரை நட்சத்திரங்களின் பட்டியலை ஐ.எம்.டி.பி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஐ.எம்.டி.பி. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நாம் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணத்திற்கு வந்துவிட்டோம். 2022-இன் IMDb டாப் 10-ல் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரங்கள் இங்கே உள்ளனர். அவர்கள்:

1. தனுஷ்
2. ஆலியா பட்
3. ஐஸ்வர்யா ராய்
4. ராம்சரண்
5. சமந்தா
6. ஹிருத்திக் ரோஷன்
7. கியாரா அத்வானி
8. ஜூனியர் என்டிஆர்
9. அல்லு அர்ஜூன்
10. யஷ்

இவை ஐஎம்டிபி இணையதள பக்கத்தில் தேடப்பட்ட திரைப் பிரபலங்களின் பெயர்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in