Published : 19 Nov 2022 12:50 PM
Last Updated : 19 Nov 2022 12:50 PM

நடிகை ராகினி திவேதிக்கு காயம்

கன்னட நடிகையான ராகினி திவேதி, ‘நிமிர்ந்து நில்’ படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்திருந்தார். அடுத்து சந்தானம் நடித்துள்ள ‘கிக்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்போது பாபு கணேஷ் இயக்கும் படத்தில் கமாண்டோவாக நடித்து வருகிறார். தமிழ், கன்னடத்தில் இந்தப் படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பில் அவர் காயம் அடைந்துள்ளார். கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், நலம் பெற்றுவருவதாகத் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x