மம்முட்டி - ஜோதிகா நடிக்கும் ‘காதல் தி கோர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மம்முட்டி - ஜோதிகா நடிக்கும் ‘காதல் தி கோர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

மலையாள நடிகர் மம்முட்டி - ஜோதிகா இணைந்து நடிக்கும் ‘காதல் தி கோர்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி-15ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான மலையாள படம் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படத்தை இயக்குநர் ஜியோ பேபி இயக்கியிருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கும் புதிய படம் ‘காதல் தி கோர்’. நடிகர் மம்முட்டியுடன் நடிகை ஜோதிகா இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்.

பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நடிகை ஜோதிகா மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மம்முட்டி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சி கோலஞ்சேரி ப்ரூக்சைட் கிளப்பில் நடந்து வருகிறது. அண்மையில் படபிடிப்பு செட்டுக்கு விருந்தினராக சென்ற நடிகர் சூர்யா படபிடிப்பு குழுவினருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி சாபிட்டுவிட்டு புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. காதலை மையப்படுத்திய குடும்பப் படமாக இருக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் படத்தின் போஸ்டர் உள்ளது. மேலும், மலையாள சினிமாவின் க்ளைமாக்ஸ் காட்சியின் கடைசி ஷாட்டைப்போல உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து ஷேர் செய்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in