ஹீரோவாக அறிமுகமாகும் தயாரிப்பாளர் மகன்

ஹீரோவாக அறிமுகமாகும் தயாரிப்பாளர் மகன்
Updated on
1 min read

கன்னட படங்களான ‘கே.ஜி.எஃப்’, ‘777 சார்லி’ ஆகியவை பான் இந்தியா முறையில் வெற்றி பெற்றிருப்பதால், இப்போது மேலும் சில கன்னடப் படங்கள் அதே முறையை பின்பற்றத் தொடங்கி இருக்கின்றன.

அந்த வகையில் கன்னட சினிமா தயாரிப்பாளரும், தொழிலதிபருமான ஜனார்த்தன் ரெட்டி மகன் கிரீட்டி, ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழியில் உருவாக்குகின்றனர். இதற்கு ‘ஜூனியர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். படத்தை ராதாகிருஷ்ண ரெட்டி இயக்குகிறார். வி. ரவிச்சந்திரன், ஜெனிலியா, ஸ்ரீ லீலா உள்பட பலர் நடிக்கின்றனர். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வாராஹி ‌ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in