Published : 14 May 2022 05:46 PM
Last Updated : 14 May 2022 05:46 PM

பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா

மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'சர்காரு வாரி பாட்டா' தெலுங்கு திரைப்படம் வெளியான 2 நாட்களில் 69 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் 'சர்காரு வாரி பாட்டா'. இந்த திரைப்படம் கடந்த 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ஆனால் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே சூப்பர் ஹிட் அடித்தன. இதனிடையே, 2 ஆண்டுகளுக்குப் பிறகு மகேஷ் பாபு படம் வெளியாவதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

அதனால் படம் வெளியான இரண்டு நாட்களில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மொத்தம் 62.24 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல் நாள் 52.18 கோடியும், இரண்டாவது நாள் 17.06 கோடி ரூபாயம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x