'சர்காரு வாரி பாட்டா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

'சர்காரு வாரி பாட்டா' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

மகேஷ் பாபு நடித்துவரும் 'சர்காரு வாரி பாட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துவரும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’. இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் 2022-ம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. பவன் கல்யாண் மற்றும் பிரபாஸ் ஆகியோரின் படங்களும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது 'சர்காரு வாரி பாட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் 2022-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி வெளியீடு எனவும் அறிவித்துள்ளது. மகேஷ் பாபுவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 9-ம் தேதி படத்தின் சர்ப்ரைஸ் காத்திருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

தமன் இசையமைத்துவரும் இந்தப் படத்தை மகேஷ் பாபு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 14 ரீல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in