'கே.ஜி.எஃப் 2' டீஸர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

'கே.ஜி.எஃப் 2' டீஸர் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
Updated on
1 min read

'கே.ஜி.எஃப் 2' படத்தின் டீஸர் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

'கே.ஜி.எஃப் சேப்டர் 1' படத்தைத் தொடர்ந்து, 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. இதில் புதிதாக சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட சிலரின் கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையவுள்ளது.

யாஷ் - சஞ்சய் தத் மோதும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியைப் படமாக்கி முடித்துவிட்டது படக்குழு. இதனால், எப்போது வேண்டுமானாலும் டீஸர் குறித்த அறிவிப்பு இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதனிடையே, டிசம்பர் 21-ம் தேதி முக்கிய விருந்து ஒன்று காத்திருப்பதாகப் படக்குழு அறிவித்தது. டீஸராகத் தான் இருக்கும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், 'கே.ஜி.எஃப் 2' படக்குழுவினர் புதிய போஸ்டருடன், டீஸர் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். ஜனவரி 8-ம் தேதி காலை 10:18 மணிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் 'கே.ஜி.எஃப் 2' டீஸர் வெளியாகவுள்ளது. இந்த அதிகாரபூர்வ அறிவிப்பை 'கே.ஜி.எஃப்' படத்தின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

கோடை விடுமுறைக்கு 'கே.ஜி.எஃப் 2' வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாகப் படக்குழு அறிவிக்கவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in