நடிகை சஞ்சனா ஜாமீனில் விடுதலை

நடிகை சஞ்சனா ஜாமீனில் விடுதலை
Updated on
1 min read

பெங்களூருவில் போதைப் பொருள் வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த செப்டம்பரில் கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உட்பட 16 பேரை கைது செய்தனர்.

இதையடுத்து ராகினி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் பெங்களூரு மாநகர முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்தமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினர். இதை விசாரித்த நீதிபதி சீனிவாஸ் ஹரிஷ் குமார், சஞ்சனாவுக்கு நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து சஞ்சனாநேற்று சிறையில் இருந்துவெளியே வந்தார். ராகினிதிவேதிக்கு இன்னும் ஜாமீன்கிடைக்கவில்லை.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in