பிரித்விராஜ் தயாரித்து, நடிக்கும் குருதி

பிரித்விராஜ் தயாரித்து, நடிக்கும் குருதி
Updated on
1 min read

பிரித்விராஜ் தயாரித்து, நடிக்கவுள்ள படத்துக்கு 'குருதி' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

மலையாளத் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பணிபுரிந்து வருபவர் பிரித்விராஜ். இவருடைய தயாரிப்பில் '9' மற்றும் 'டிரைவிங் லைசன்ஸ்' ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. தற்போது தனது மூன்றாவது தயாரிப்பை அறிவித்துள்ளார் பிரித்விராஜ்.

இப்படத்தை மனு வாரியர் இயக்கவுள்ளார். இந்தியில் 'காஃபி ப்ளூம்' என்ற படத்தை இயக்கியவர், 'குருதி' படத்தின் மூலம் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் முரளி கோபி, ரோஷன் மேத்யூ, ஸ்ரீண்டா, நவாஸ் வள்ளிக்குன்னு உள்ளிட்ட பலர் பிரித்விராஜுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அனுஷ் பல்யால் எழுதியுள்ள இக்கதைக்கு அபிநந்தன் ஒளிப்பதிவாளராகப் பணிபுரியவுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். டிசம்பர் 9-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஒரே கட்டமாக ஜனவரி 2-ம் வாரத்துக்குள் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in