தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண்

தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண்
Updated on
1 min read

தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'தனி ஒருவன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் நடிக்க, சுரேந்தர் ரெட்டி இயக்குவது உறுதியாகி இருக்கிறது.

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தனி ஒருவன்'. ஆதி இசையமைத்த இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்தது.

ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. வசூலில் இப்படம் பெரும் சாதனை படைத்தது. இப்படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக்கிற்கு கடும் போட்டி நிலவியது.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை திருப்பதி பிரசாத் வாங்கியிருக்கிறார். ஜெயம் ரவி நடித்த வேடத்தில் ராம் சரண் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. 'கிக்' படத்தின் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி இயக்க இருக்கிறார். அரவிந்த் சாமி வேடத்தில் சுதீப் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், படக்குழு அதனை உறுதிசெய்யவில்லை.

இந்தி ரீமேக் உரிமைக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தி ரீமேக்கை 'தனி ஒருவன்' இயக்குநர் மோகன் ராஜாவே இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in