கொச்சைப்படுத்தியவர்களைச் சாடிய நடிகை தாரா கல்யாண்

மேடையில் பேசும் தாரா கல்யாண்.
மேடையில் பேசும் தாரா கல்யாண்.
Updated on
1 min read

பிரபல மலையாள நடிகையும், நடனக் கலைஞருமான தாரா கல்யாண், தனது புகைப்படத்தை பதிவிட்டுக் கொச்சைப்படுத்தியவர்களைக் கடுமையாக சாடியுள்ளார்.

தனது மகள் சௌபாக்யாவின் காதல் திருமணத்தை சமீபத்தில் நடத்தி வைத்துள்ளார் நடிகை தாரா கல்யாண். இந்த திருமண வைபவத்தில் எடுக்கப்பட்ட தாரா கல்யாணின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில், கொச்சையான கருத்துகளுடன் பகிரப்பட்டு வந்தது. இது பற்றி அறிந்து கொண்டா தாரா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

மகளுடன் தாரா கல்யாண்.
மகளுடன் தாரா கல்யாண்.

அதில், "சமூக வலைதளங்களில் எனது புகைப்படம் ஒன்று வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. எனது மகளின் திருமணத்தைத் தனியாக நடத்த தைரியமில்லாததால் குருவாயூரப்பனின் கைகளைப் பிடித்துக் கொண்டு அதை நடத்தினேன். அந்த திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவின் ஒரு காட்சி புகைப்படமாக எடுக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. அதைப் பகிர்ந்துள்ள நபருக்கு இதயம் இருக்கிறதா அல்லது வெறும் கல் தானா? உன் வீட்டில் அம்மா இல்லையா? உன்னை நான் என் வாழ்க்கையில் மன்னிக்க மாட்டேன்.

சமூக ஊடகம் நல்லதுதான். ஆனால் அதில் இது போல யாருக்கும் நடக்கக்கூடாது. ஏனென்றால் இது பலரது மனதை நோகடிக்கும். அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்த, ரசித்த, கருத்து பதிவிட்ட அனைவரையும் நான் வெறுக்கிறேன். இதைச் செய்தவர்கள் பெண்களை மதிக்க முயற்சிக்க வேண்டும். கலைஞர்கள் நாங்களும் மனிதர்கள் தான். எங்களுக்கும் உணர்வுகள் உண்டு" என்று கடுமையாக சாடிப் பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in