தொடரும் பாலகிருஷ்ணாவின் ரயில் சண்டைக் காட்சி கிண்டல்கள்: இயக்குநர் வருத்தம்

தொடரும் பாலகிருஷ்ணாவின் ரயில் சண்டைக் காட்சி கிண்டல்கள்: இயக்குநர் வருத்தம்
Updated on
1 min read

'பல்னாடி ப்ரம்மாநாயுடு' படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சி கிண்டல்களுக்கு முதல் முறையாக இயக்குநர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

யூ-டியூப் பக்கத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை கலாய்த்துப் பதிவிடப்பட்ட வீடியோக்கள் தான் அதிகமாக இருக்கும். அதைத் தேடினாலே அவருடைய நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளை வைத்துப் பல வீடியோக்களை பதிவேற்றி இருப்பார்கள். அனைத்துமே லட்சக்கணக்கான பார்வைகளைக் கொண்டதாக இருக்கும்.

இதில், 2003-ம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் 'பல்னாடி ப்ரம்மநாயுடு' படத்தில் இடம்பெற்ற ரயில் சண்டைக் காட்சி தான் மிகவும் பிரபலம். ஒரு ரயிலில் மீது நின்று கொண்டு, வீரமாக வசனம் பேசித் தொடையைத் தட்டிக் கையை நீட்டுவார். அப்போது அவருக்கு எதிரில் இருக்கும் ரயில் பின்னே நோக்கிச் செல்லும்.

இப்போது கூட எப்படி இப்படியெல்லாம் யோசித்தார்கள் என்று இணையத்தில் கிண்டல் செய்து வருகிறார்கள். 'பல்னாடி ப்ரம்மாநாயுடு' படத்தை இயக்கிய கோபால் முதல் முறையாக இந்தச் சண்டைக் காட்சிக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் கோபால், "'பல்னாடி ப்ரம்மநாயுடு' படத்தில் பாலகிருஷ்ணாவை அந்த தொடை தட்டும் காட்சியில் நடிக்க வைத்ததற்கு நான் இன்றும் வருந்துகிறேன். அந்த ஒரு காட்சிக்காக நான் பயங்கரமாகக் கிண்டல் செய்யப்பட்டுள்ளேன். அந்த காட்சிக்கான மொத்த பழியையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in