ப்ரணவ் மோகன்லால் ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன்

ப்ரணவ் மோகன்லால் ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன்
Updated on
1 min read

ப்ரணவ் மோகன்லால் ஜோடியாக மலையாளப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கல்யாணி ப்ரியதர்ஷன்.

பிரபல மலையாள இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன். தெலுங்கில் வெளியான ‘ஹலோ’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இந்தப் படத்தில் நாகர்ஜுனாவின் மகன் அகில் அக்கினேனி ஹீரோவாக நடித்தார்.

தொடர்ந்து சில தெலுங்குப் படங்களில் நடித்தவர், தற்போது தமிழ் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘ஹீரோ’ படத்தில் நடித்துள்ள கல்யாணி, சிம்பு ஜோடியாக ‘மாநாடு’ படத்தில் ஒப்பந்தமானார். ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் படம் தொடங்கப்படுவதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மோகன்லால் மகன் ப்ரணவ் மோகன்லால் ஜோடியாக ‘ஹ்ரிதயம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கல்யாணி ப்ரியதர்ஷன். இந்தப் படத்தை வினீத் சீனிவாசன் இயக்குகிறார். தர்ஷனா ராஜேந்திரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கல்யாணி, “இந்த வேலையில் சிறந்த விஷயமே, நாம் காலை கண் விழித்ததும் யார் நம்மை அன்று அழைப்பார் என்று தெரியாது என்பதே. இதை என் தந்தை ஒருமுறை சொன்னார். வினீத் அண்ணா... நீங்கள் என்னை அழைக்கும்போதுதான் எனக்கு என் அப்பா சொன்னது புரிந்தது.

அந்த விவரிப்பில் நீங்கள் மொத்தப் படத்தையும் என்னை உணர வைத்துவிட்டீர்கள். நான் உணர்ந்ததை மற்றவர்களும் உணரவைக்க என்னால் காத்திருக்க முடியாது. எனது அடுத்த படத்துக்கு உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களும் தேவை. அது ஒரு விசேஷமான படம்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் (2020) ஓணம் பண்டிகைக்கு ‘ஹ்ரிதயம்’ படம் வெளியீடு என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in