2020-ல் படங்களை அடுக்கும் விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா | படம்: பு.க.பிரவீன்
விஜய் தேவரகொண்டா | படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

2020-ம் ஆண்டில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் 4 படங்கள் வெளியாகும் என தெரிகிறது. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்து இறுதியாக வெளியான படம் 'டியர் காம்ரேட்'. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியானது. இதன் இந்தி ரீமேக் உரிமையைக் கரண் ஜோஹார் கைப்பற்றினார். ஆனால், இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சோபிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து சில கால ஓய்வுக்குப் பிறகுத் தனது முதல் தயாரிப்பில் கவனம் செலுத்தி வந்தார் விஜய் தேவரகொண்டா. தற்போது அவரது முதல் தயாரிப்பான 'Meeku Maathrame Cheptha' வெளியாகிவிட்டதால், நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துவிட்டார்.

க்ராந்தி மாதவ் இயக்கத்தில் உருவாகி வரும் 'World famous Lover' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இன்னும் 8 நாட்களே உள்ளது. அதை இந்த மாதத்தில் முடித்துக் கொடுக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்தப் படத்தின் டப்பிங் பணிகள் உள்ளிட்டவை அனைத்தையும் இந்தாண்டுக்குள் முடித்துக் கொடுக்கத் தீர்மானித்துள்ளார்.

ஜனவரியிலிருந்து பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகும் 'ஃபைடர்' படத்தில் நடிக்கத் தேதிகள் கொடுத்துள்ளார். இது குறுகிய கால தயாரிப்பாக உருவாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து பெரும் பொருட்செலவில் உருவாகும் 'ஹீரோ' படத்தை முடித்துக் கொடுக்கவுள்ளார். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து 'மஜிலி' படத்தின் இயக்குநர் ஷிவ் நிர்வானா இயக்கத்தில் உருவாகும் ஒரு காதல் படத்தில் நடிக்கவுள்ளார்.

மேற்கண்ட 4 படங்களுமே அடுத்தாண்டு வெளியீட்டில் இருக்கும்படி திட்டமிட்டு விஜய் தேவரகொண்டா தேதிகள் ஒதுக்கியிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in