'சாஹோ' எதிர்மறை விமர்சனங்கள்: ஷ்ரத்தா கபூர் காட்டம்

'சாஹோ' படத்தில் ஷ்ரத்தா கபூர்
'சாஹோ' படத்தில் ஷ்ரத்தா கபூர்
Updated on
1 min read

'சாஹோ' படத்துக்குக் கிடைத்த எதிர்மறை விமர்சனங்கள் குறித்து நாயகி ஷ்ரத்தா கபூர் காட்டமாகப் பதிலளித்துள்ளார்.

சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராஃப், மந்த்ரா பேடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சாஹோ'. யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளியானது.

விமர்சன ரீதியாக இந்தப் படம் கடும் எதிர்வினைகளையே சந்தித்தது. பெரும் முதலீடு என்பதால் இந்த விமர்சனத்தால் எப்படிப் போட்ட முதலீடு திரும்ப வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தப் படம் நல்ல வசூல் செய்தது.

'சாஹோ' படத்துக்குக் கிடைத்த விமர்சனங்கள் குறித்து நாயகி ஷ்ரத்தா கபூர் அளித்துள்ள ஒரு பேட்டியில், "வெள்ளிக்கிழமையன்று படத்தின் விமர்சனங்கள் வெளியானபோது, சில விமர்சகர்கள் இந்தப் படம் தேறாது என்று சொல்வார்களோ என்று நினைத்தேன். ஆனால், ஆச்சரியப்பட வைக்கும் வகையில் ரசிகர்கள் படத்தை விரும்பினர்.

ஒரு நிமிடம் நானே என்னிடம் என்ன நடக்கிறது என்று கேட்டுக்கொண்டேன். பொறுத்திருந்து பார்க்கலாம் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். இதுவரை எனது படங்களில் அதிக வசூல் செய்த படம் இது. அதனால்தான் சொல்கிறேன், ரசிகர்களிடம் எது சேரும், சேராது என்பது எப்படி உங்களுக்குத் தெரியும?" என்று தெரிவித்துள்ளார் ஷ்ரத்தா கபூர்.

தமிழில் 'சாஹோ' திரைப்படம் படுதோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. இதில் முதலீடு செய்த விநியோகஸ்தர்கள் பலருக்கும் சுமார் 60% வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், 'சாஹோ' படக்குழுவோ தாங்கள் முதலீடு செய்த பணம் திரும்ப வந்துவிட்டதாக அறிவித்துள்ளது.

என் வாழ்க்கையை மாற்றிய படம்: பிரியதர்ஷினி ராஜ்குமார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in