செய்திப்பிரிவு

Published : 04 Sep 2019 09:42 am

Updated : : 04 Sep 2019 09:42 am

 

உச்சம் தொட்ட 'சாஹோ': 4 நாட்களில் ரூ.330 கோடி வசூல்!

330-crores-in-4-days

'சாஹோ' வெளியான 4 நாட்களில் இந்தியாவின் அனைத்து சாதனைகளையும் தகர்த்தெறிந்து ரூ.330 கோடியைக் குவித்துள்ளது.

சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'சாஹோ'. கேங்ஸ்டர் குழுக்களுக்கு இடையில் மோதல் நிகழும்போது அதில் தனி ஒருவனாக இருந்து தன் சாம்ராஜ்ஜியத்தை பிரபாஸ் நிறுவுவதே 'சாஹோ' படத்தின் கதை.

ஜாக்கி ஷெராஃப், நீல் நிதின் முகேஷ், மந்த்ரா பேடி, மகேஷ் மஞ்ச்ரேக்கர், அருண் விஜய், முரளி சர்மா முதலான மிகப்பெரும் இந்திய நடச்த்திரங்கள் இணைந்து நடிப்பில் கலக்க்கியுள்ளனர்.

ரிலீஸான முதல் நாளிலேயே 100 கோடியைக் கடந்து சாதனை படைத்த 'சாஹோ' இரண்டாம் நாளில் உலக அளவில் ரூ.205 கோடியைக் கடந்தது. 'சாஹோ' இந்தியாவில் 'அவஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்தின் சாதனையை எளிதாய் முறியடித்தது. விநாயகர் சதுர்த்தி தினமான திங்கள் கிழமையிலும் ரூ.14.20 கோடியைக் குவித்துள்ளது. வெளியான 4 நாட்களில் இந்தியாவின் அனைத்து சாதனைகளையும் தகர்த்தெறிந்து ரூ.330 கோடியைக் குவித்துள்ளது.

சாஹோ ரூ.330 கோடி வசூல் பிரபாஸ் ஷ்ரத்தா கபூர் உச்சம் தொட்ட சாஹோ
Popular Articles

You May Like

More From This Category

More From this Author