

'கே.ஜி.எஃப் 2' படத்தில் தீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த கதாபாத்திரத்தின் போஸ்டர் இன்று (ஜூலை 29) வெளியிடப்பட்டது.
கன்னட மொழிப் படமான 'கே.ஜி.எஃப்', தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பிரஷாந்த் நீல் இயக்கிய இந்த படத்தில் யாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
இன்று நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாள் என்பதால், 'கே.ஜி.எஃப் 2' படத்தில் அவர் ஏற்று நடித்திருக்கும் தீரா கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குநர் ஃபர்ஹான் அக்தர் இந்த போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
"குழந்தைப் பருவதில் நான் இவரது முதல் படமான ராக்கி படப்பிடிப்பைப் பார்த்தது நினைவிருக்கிறது. இவ்வளவு வருடங்கள் கழித்து ஒரு விசேஷமான படத்துக்காக இணைகிறோம். இதோ 'கே.ஜி.எஃப் 2'ல் ஆதீராவாக சஞ்சய் தத். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார் ஃபர்ஹான்.
இன்னொரு பாலிவுட் பிரபலமான ரவீணா டண்டன்னும் 'கே.ஜி.எஃப் 2' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.