

சிவராஜ்குமார், உபேந்திரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘45: தி மூவி’. இதனை இசையமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார். ராஜ் பி. ஷெட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் டிச. 25 வெளியாக உள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வரும் டிச.15 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் கே. ரவி வெர்மா, ஜாலி பாஸ்டியன், டிஃப்பரண்ட் டேனி சேதன் டிசோசா ஆகியோர் ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். சத்யா ஹெக்டேவின் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் இயக்குநர் அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் இடம்பெற்ற ‘ஆஃப்ரோ தபாங்’ என்ற பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது.