தன் மகன் நடிக்கும் திரைப்படத்துடன் தன் படத்தையும் துவக்கிய மோகன்லால்

தன் மகன் நடிக்கும் திரைப்படத்துடன் தன் படத்தையும் துவக்கிய மோகன்லால்
Updated on
1 min read

மோகன்லால் நடிப்பில் 'ஓடியன்' படமும், அவரது மகன் ப்ரணவ் நடிக்கும் 'ஆதி' திரைப்படமும் ஒரே நாளில் தொடங்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தில் இரண்டு திரைப்படங்களின் துவக்க விழா பிரம்மாண்டமாக நடந்தது.

வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில் மோகன்லால் ஓடியன் படத்திலும், ஜீது ஜோசஃப் இயக்கத்தில் மோகன்லால் மகன் ப்ரணவ் நடிக்கின்றனர். ஜீது ஜோசப்பிடம் ப்ரணவ் உதவி இயக்குநராகவும் இருந்துள்ளார்.

இந்த விழாவில் பேசிய மோகன்லால், "என் படங்கள் பற்றியும் என் மகன் பற்றியும் பலரும் பேசியதைக் கேட்ட பிறகு, வாழ்க்கையில் முதல் முறையாக நான் பதட்டமாக உணர்கிறேன்" என்றார்.

கேரள அரசியல் மற்றும் சினிமாவைச் சேர்ந்த பலப் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் ப்ரணவ் மேடையில் பேசவில்லை.

ப்ரணவ் 2003-ஆம் ஆண்டு மேஜர் ரவி இயக்கத்தில், 'புனர்ஜனி' என்ற படத்தில் நடித்தார். அதற்காக கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற மாநிலை விருதையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in