1000 மீட்டர் உயரத்தில் தவித்த பிரபாஸ், ஷ்ரத்தா: ‘சாஹோ’ படப்பிடிப்பில் பரபரப்பு

1000 மீட்டர் உயரத்தில் தவித்த பிரபாஸ், ஷ்ரத்தா: ‘சாஹோ’ படப்பிடிப்பில் பரபரப்பு
Updated on
1 min read

‘சாஹோ’ படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஆஸ்திரியாவின் ஆல்பஸ் பனி மலைப்பிரதேசத்தில் நடந்து வருகிறது. ஒரு பாடலும், சண்டைக் காட்சியும் இங்கு படமாக்கப்பட்டு வருகிறது. படக்குழுவினர், சால்டன் என்ற இடத்தில் இருக்கும் விடுதியில் தங்கியுள்ளனர்.

சமீபத்தில் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஒரு நாள், பிரபாஸ், ஷ்ரத்தா, அவரது ஒப்பனை மற்றும் ஆடை உதவியாளர்கள் அனைவரும் ஒரு கேபிள் காரில் மலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட 1,368 அடி உயரத்தில் கேபிள் கார் திரும்ப வந்து கொண்டிருந்தபோது, கடும் மழை காரணமாக, கேபிள் கார் அப்படியே நிறுத்தப்பட்டு, மின்சாரமும் பறிபோனது.

ஷ்ரத்தா மற்றும் அவரது உதவியாளர்கள் பதற, பிரபாஸ் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, நம்பிக்கை கொடுத்துள்ளார். ‘விரைவில் மழைநின்று கேபிள் கார் மீண்டும் இயங்கும் அல்லது நம்மைக் காப்பாற்ற ஆட்கள் வருவார்கள்’ என்று கூறியுள்ளார். அடுத்த அரை மணி நேரத்தில் மழை நிற்க, கேபிள் கார் மீண்டும் இயங்கி, இவர்கள் அனைவரும் பத்திரமாகத் தரையிறங்கியுள்ளனர்.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி ‘சாஹோ’ வெளியாகவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in